×

ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4560 அடி உயரம் உள்ள பர்வத மலையில் கிரிவலம் தொடர் விடுமுறையால் திரண்டு தரிசனம் புரட்டாசி மாத பவுர்ணமி சிறப்பு வழிபாடு

கலசபாக்கம், செப். 29: புரட்டாசி மாத பவுர்ணமியைெயாட்டி கலசபாக்கம் அருகே 4560 அடி உயரம் உள்ள பர்வத மலையில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் தொடர் விடுமுறை காரணமாக பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கலசபாக்கம் அடுத்த தென் மகாதேவ மங்கலம் கிராமத்தில் 4560 அடி உயரம் உள்ள பர்வத மலையில் சித்தர்கள் இன்றும் காட்சி தரும் இம்மலையில் இன்றும் ரிஷிகளும், முனிவர்களும், சூட்சும வடிவில் கிரிவலம் வருகின்றனர். 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த மல்லிகா அர்ஜூனேஸ்வரர் பிரம்மராம்பிகை அம்பாள் கோயில் 4560 அடி உயரத்தில் உள்ளது.

மேலும் இக்கோயிலின் சிறப்பு பக்தர்கள் கொண்டு செல்லும் அபிஷேகப் பொருட்களை வைத்து தங்கள் கைகளாலேயே அபிஷேகம் செய்யலாம். பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருந்த நிலை மாறி தற்போது தினந்தோறும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. குறிப்பாக வார இறுதி நாட்களில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வருகை தந்து காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
நேற்று மாலை புரட்டாசி மாத புவுர்ணமியை முன்னிட்டு கோயில் மாதிமங்கலம் கிராமத்தில் உள்ள கரைகண்டேஸ்வரர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கடலாடி பட்டியந்தல் வேடபுலி வெள்ளந்தாங்கிஸ்வரர் கோயில் வழியாக சுமார் 23 கிலோமீட்டர் கிரிவலம் வந்து மலையின் உச்சிக்கு சென்று அபிஷேகப் பொருட்களை வைத்து வழிபட்டனர்.

மலை அடிவாரத்தில் இந்து சமய அறநிலை துறை அதிகாரிகள் வனத்துறை மற்றும் காவல் துறையினர் பக்தர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்கிறார்களா என்பதை பரிசோதனை செய்து மலையேற அனுமதித்தனர். அதேபோல் மலை அடிவாரத்தில் உள்ள வீரபத்திரன் கோயிலில் பக்தர்களுக்கு சக்தியையும் தைரியத்தையும் ஏற்படுத்திட பக்தர்களின் கைகளில் சக்தி கயிறு கட்டப்பட்டது. மலை அடிவாரத்தில் இருந்து பாதி மண்டபம் வரை குடிநீர் வசதி செய்து தரப்பட்டுள்ளதால், பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாங்கள் கொண்டு வந்த தண்ணீர் பாட்டில்களில் தண்ணீரை நிரப்பி சென்றனர். வியாழன் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்தால் மிகுந்த சந்தோஷம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

The post ஆயிரக்கணக்கான பக்தர்கள் 4560 அடி உயரம் உள்ள பர்வத மலையில் கிரிவலம் தொடர் விடுமுறையால் திரண்டு தரிசனம் புரட்டாசி மாத பவுர்ணமி சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Parvada Hill ,Krivalam ,Darshanam Puratasi ,Kalasapakkam ,Puratasi ,Parvatha hill ,
× RELATED 4560 அடி உயரமுள்ள பர்வத மலையில் இன்று...